பிச்சாவரம் சுற்றுலா மைய மேம்பாட்டு பணிக்கு அடிக்கல் நாட்ட வருகை தந்த வேங்கையின் மைந்தர் மாண்புமிகு MRK.Panneerselvam அவர்கள் 1992 ல் நடந்த சம்பவத்தை மாவட்ட ஆட்சியரிடம் சொல்லி நெகிழ்ந்தார்…
நேற்று 14 .7 கோடி பிச்சாவரம் சுற்றுலா மைய மேம்பாட்டு பணிக்கு அடிக்கல் நாட்ட வருகை தந்த வேங்கையின் மைந்தர் மாண்புமிகு MRK.Panneerselvam அவர்கள் 1992 ல் நடந்த சம்பவத்தை மாவட்ட ஆட்சியரிடம் சொல்லி நெகிழ்ந்தார்…
======================
வீரவேங்கை பெருந்தலைவர் MRK அவர்கள் மறைந்த பிறகு நடைபெற்ற முதல் மாவட்ட கழக செயலாளர் தேர்தலில் அண்ணன் MRKP அவர்கள் போட்டியிட்டார் அவரை எதிர்த்து பண்ருட்டிமணி போட்டியிட்டார், அப்போது போட்டி மிகவும் கடுமையாக தான் இருந்தது..
கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், ரிஷிவந்தியம் அனைத்தும் ஒருங்கிணைந்த கடலூரில்..
வாக்காளர்களை எங்கே தங்க வைப்பது என்று செஞ்சியார் அவர்கள் டாக்டர் துரை, கிருஷ்ணமூர்த்தி அவர்களிடம் கேட்கும்போது அருகில் இருந்தோர் ஆளாளுக்கு ஒரு இடத்தை சொல்ல மிட்டாய் கடை செல்வம்(அல்வா செல்வம்) சொன்னார் பிச்சாவரத்தில் வைக்கலாம் அங்க கீழச்சாவடி துரை, நல்லதம்பி, கிள்ளைரவி, எல்லாம் இருக்காங்க பாத்துக்கலாம் என்றார், அப்போது நான் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்..அப்போது ஒன்றிய இளைஞரணி அமைப்பாளராக இருந்த வல்லம்படுகை ராஜேந்திரன், கீரப்பாளையம் சபா, புவனகிரி மதியழகன் உள்ளிட்டோர் இப்போது ஒன்றிய செயலாளர்கள்..
செல்வம் அவர்களின் சொல்படியே வாக்காளர்கள் அனைவரும் பிச்சாவரத்தில் தங்கவைக்கப்பட்டு சிறப்பாக கவனிக்கப்பட்டனர்,பிச்சாவரம் அப்போது இவ்வளவு பிரபலமோ மோட்டார் படகோ இல்லை, கருமையான கன்னா தோணிதான் அதில்தான் இங்கிருந்து மறுகரையான தீவு பகுதியில் இருந்த Cottage க்கு உணவு எடுத்து செல்லவேண்டும், என் தலையில் சூடான குழம்பு பானையை தூக்கிவைக்ககூடு தாங்கமுடியாமல் தலையாட்ட குழம்பு முதுகில் ஊத்தி கொப்பளித்து பிறகு Dr துரை, கிருஷ்ணமூர்த்தி அவர்களே அந்த 19ம் நம்பர் ரூமில் இங்க் மருந்தை தடவி ஓய்வெடுக்க சொன்னதை மறக்க முடியாது…அந்த 19ம் நம்பர்ரூம்தான் கட்சிகாரர்களுக்கு இலவச மருத்துவம் பார்க்கும் ரூம்…
அப்போது சிதம்பரத்தில் ஒரு மாவட்ட பிரதிநிதி மணிவண்ணன் கிள்ளையில் ஒரு மாவட்ட பிரதிநிதி(பெயர்சொல்ல விரும்பவில்லை) இருவர் மட்டுமே பண்ருட்டிமணி அவர்களுக்கு வாக்களித்தனர் இந்த காட்டுமன்னார்கோவில்,சிதம்பரம் பகுதியில்…
அப்போதுதான் முதன்முறையாக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்று முதல் மாவட்ட செயலாளர் ஆனார் மாண்புமிகு MRK பன்னீர்செல்வம் அவர்கள் அதற்கு நானும் ஒரு அணிலாய் பணிசெய்தேன்…
நேற்று பிச்சாவரம் வந்தவர் வனத்துறை அலுவலகத்தை பார்வையிடும்போது ஆத்துக்கு அந்த புறத்தில் Cottege இருக்குமே? என்றார்
நான் ஜன்னலால் காண்பித்தேன் சற்றுநேரம் அமைதியாக பார்த்துவிட்டு மாவட்ட ஆட்சியரிடம் சொன்னார் அங்கதான் நான் முதன்முதலில் மாவட்ட செயலாளர் தேர்தலில் நின்றபோது ஓட்டர்ஸ்சை கொண்டுவந்து தங்க வைத்தோம், மிகவும் அருமையான இடம் நம் தமிழக முதல்வர் M. K. Stalin அவர்கள் கூட அங்குவந்து தங்கி உள்ளார்..
எனவே
நான் வனத்துறை அமைச்சர் மற்றும் வனத்துறை செயலாளரிடம் பேசுகிறேன் அந்த இடத்தில் மீண்டும் அழகான cottage களைகட்ட நடவடிக்கை எடுங்கள் என்று வனசரகரிடம் தெரிவித்தார்…
மலரும் நினைவுகள் மகிழ்வான நிமிடங்கள்



ReplyForward
|
பிச்சாவரம் சுற்றுலா மைய மேம்பாட்டு பணிக்கு அடிக்கல் நாட்ட வருகை தந்த வேங்கையின் மைந்தர் மாண்புமிகு MRK.Panneerselvam அவர்கள் 1992 ல் நடந்த சம்பவத்தை மாவட்ட ஆட்சியரிடம் சொல்லி நெகிழ்ந்தார்…