பள்ளி மேலாண்மை குழு தெரியுமா?
பாம்பு பிடிக்க தெரியும், எலி பிடிக்க தெரியும், நண்டுபிடிக்க, மீன்பிடிக்க தெரியும், பூட்சி வெட்ட ஊர்ஊரா போக தெரியும்..தன் பிள்ளைகள் 8வது பாஸா பெயிலோ, திருப்பூர், கோவை என சம்பாதிக்க அனுப்ப தெரியும்!
அப்படி எந்த குழுவும் தெரியாது..
பள்ளி மேலாண்மை குழு தேர்வு இன்று நடைபெற்றது நானும் ஒரு உறுப்பினர் ஆனேன் உள்ளாட்சி பிரதிநிதி என்பதால்..
சத்தியபிரமானம் எடுத்துக்கொண்டனர்
தமிழகத்தின் திராவிட மாடல் முதல்வர் M. K. Stalin அவர்களின் 8 நிமிட பேச்சை போட்டு கேட்க வைத்தோம்..
உள்ளபடியே அவர்கள் முகத்தில் மாற்றம் தெரிந்தது..
இனி எங்கள் பிள்ளைகளை படிக்க வைப்போம், திருட முடியாத சொத்து கல்விதான் என்று ஸ்டாலின் சொல்றாரு..அது உண்மைதான் என்று ஒரு பெண் குரல் ஒலித்தது…
ஆம்..என்று
ஒற்றுமையாக உணர்ந்தனர்!
அவர்கள் கேட்ட கேள்வி
தலைவரே!
இந்த வருசம் ஆண்டு வியா நடத்துமா?
ஓ..கண்டிப்பாக
நடத்துவோம்
நம் அமைச்சரிடம் தேதி கேட்டு சொல்கிறேன் என்று விடைபெற்றேன் மகிழ்வாக!
போட்டியை மட்டும் உருவாக்கினேன்
MGR நகருக்கு மல்லிகா(பேரூராட்சி தலைவர்)
கலைஞர் நகருக்கு நான்..
எந்த ஊர் கல்வியில் ஜெயிக்குதுன்னு இந்த வருசம் பாப்போம் என்றேன்..
காரணம்
இரண்டும் என்னால் 2006ல் உருவாக்கப்பட்ட பழங்குடி பள்ளிகள்

யார் இவர்கள்? இவர்கள்தான் கிள்ளை கலைஞர் நகர் இருளர் பழங்குடிகள்.