கிள்ளையில் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை எம்.ஆர்.கே., கல்வி குழும தலைவர் கதிரவன் வழங்கினார் அருகில், நகர செயலர் கிள்ளைரவிந்திரன், ஒன்றிய பொறுப்பாளர் கலையரசன், ஒன்றிய செயலர் முத்து பெருமாள்.
கிள்ளையில், முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, ஏழைகளுக்கு, வேட்டி, புடவை, போர்வை, பிரியாணி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. நகர செயலர் கிள்ளைரவிந்திரன் தலைமை தாங்கினார். தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் கலையரசன், ஒன்றிய செயலர் முத்து பெருமாள், நகர அவைத்தலைவர் சாம்பசிவம், நகர செயலர் முனவர் உசேன் முன்னிலை வகித்தனர். ஏழைகளுக்கு, நலத்திட்ட உதவிகளை, எம்.ஆர்.கே., கல்வி குழும தலைவர் கதிரவன் வழங்கினார். நகர நிர்வாகிகள் அன்பு, மகாலிங்கம், பொறுப்புக்குழு இளவரசு, கலையரசன், ஒன்றைய வர்த்தக அணி அமைப்பாளர் சங்கர், முன்னால் கதர் வாரிய உறுப்பினர் தன ஜெயராமன், மலையரசன், நேத்தாஜ் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
