கிள்ளை பேரூராட்சி மன்றத்தின் நியமன குழு மற்றும் வரி மேல் முறையீட்டுக் குழு உறுப்பினர் தேர்தல் பேரூராட்சி தலைவர் மல்லிகா, துணைத் தலைவர் கிள்ளை ரவீந்திரன், தேர்தல் நடத்தும் அலுவலர் செல்வி ஆகியோர் முன்னிலையில் பேரூராட்சி அலுவலகத்தில் நடந்தது. இதில் நியமன குழு உறுப்பினராக 7வது வார்டு கவுன்சிலர் யாஸ்மின் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதேபோல் வரி மேல் முறையீட்டுக் குழு உறுப்பினர்களாக, 1-வது வார்டு கவுன்சிலர் ஐஸ்வர்யா, 9-வது வார்டு கவுன்சிலர் பாண்டியன், 12வது வார்டு கவுன்சிலர் மைதிலி, 13வது வார்டு கவுன்சிலர் மதுரச்செல்வி ஆகியோர் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் கடலூர் மாவட்ட தி.மு.க செயலாளரும், வேளாண்மை, உழவர் நலத்துறை அமைச்சருமான எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அறிவுறுத்தலின்படி கல்வியாளர் எம்.ஆர்.கே கல்வி குழுமத்தின் தலைவர் கதிரவன் ஆதரவோடு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

கிள்ளை பேரூராட்சியில் நியமன குழு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு!