கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் அவர்களிடம் கிள்ளை பேரூராட்சி தலைவர் மல்லிகை, துணைத்தலைவர் கிள்ளைரவிந்திரன் ஆகியோர் கிள்ளை பேரூராட்சிக்குட்டபட்ட சிங்காரகுப்பம் கிராமத்தில் பட்ட இல்லாத குடும்பங்களுக்கு இலவச மனைப் பட்டா வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
பேரூராட்சி பகுதி முழுவதும் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும். தமிழ்நாடு அரசு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் ஒரு ஏக்கர் நிலையில் 90 பயனாளிகளுக்கு வீடு கட்டித்தர வேண்டும்.
கிள்ளை பேரூராட்சின் நலன் கருதி பொதுமக்களுக்கு கூடுதலாகக அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்திருக்கிறார்கள்.
கடலூர் மாவட்ட கலெக்டரிடம் பேரூராட்சி தலைவர் , துணை தலைவர் கோரிக்கை!
