மறைமுக தேர்தலில் தி.மு.க வேட்பாளர் போட்டியின்றி வெற்றி பெற்று, கிள்ளை பேரூராட்சி தலைவராக இருளர் இன பெண் மல்லிகா, பதவி ஏற்றுக் கொண்டார். துணை தலைவராக கிள்ளைரவிந்திரன் தேர்வு செய்யப்பட்டார்.
கிள்ளை பேரூராட்சியில் உள்ள 15 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு கடந்த மாதம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இந்த பதவிகளுக்கு 42 பேர் போட்டியிட்டனர். இதில் கிள்ளை பேரூராட்சி 3 வது வார்டு அ.தி.மு.க. வேட்பாளர் அறிவழகன் தி.மு.க வேட்பாளர் மல்லிகா ஆகியோர் போட்டியின்றி வெற்றி பெற்றனர்.

இதையடுத்து நடந்த நகரப்புற உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க 8 வார்டுகளிலும், அ.தி.மு க. 1 ,காங்கிரஸ் 3 வி.சி.க. 1 வார்டுகளிலும் வெற்றி பெற்றது. இதன்மூலம் போட்டியின்றி வெற்றி பெற்ற கவுன்சிலர்களையும் சேர்த்து தி.மு.க. மொத்தம் 9 வார்டுகளிலும், அ.தி.மு.க. 2 வார்டுகளிலும் வெற்றி பெற்றது.
இருளர் இன பெண்
இதில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் அனைவருக்கும் கடந்த 2-ஆம் தேதி பேரூராட்சி அலுவலகத்தில் பதவி ஏற்றுக்கொண்டனர். இதையடுத்து பேரூராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத்தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தல் நேற்று நடந்தது. மேலும் கிள்ளை பேரூராட்சி மன்ற தலைவர் பதவி இருளர் இன பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.
துணைத் தலைவர்
இதையடுத்து மதியம் துணை தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடந்தது. இதில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட 6வது வார்டு கவுன்சிலர் கிள்ளைரவிந்திரன் போட்டியின்றி வெற்றி பெற்றார். இவரும் உடனடியாக பதவி ஏற்றுக் கொண்டார்.