கிள்ளை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச சிலம்பாட்ட பயிற்சி நடைபெற்றது. பயிற்சியை பேரூராட்சி மன்ற தலைவர் மல்லிகா, துணை தலைவர் கிள்ளைரவிந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தார்கள். இதில் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இவர்களுக்கு சிலம்பம் பயிற்சியாளர் கார்த்திகேயன் பயிற்சி அளித்து வருகிறார். இதில் பள்ளி ஆசிரியர் கவிதா, கவுன்சிலர் பாண்டியன், முன்னாள் கதர் வாரிய உறுப்பினர் ஜெயராமன், நகர அவைத்தலைவர், சாம்பசிவம், ஒன்றிய பிரதிநிதி மலையரசன், தி.மு.க பிரமுகர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.