பரங்கிப்பேட்டை கிள்ளை பேரூராட்சியில் நகர்ப்புற வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி கிள்ளையில் நடந்தது. இதற்கு பேரூராட்சி மன்ற தலைவர் மல்லிகா முத்துக்குமார் தலைமை தாங்கினார். இதில் 120 பேருக்கு அடையாள அட்டையை பேரூராட்சி மன்ற துணை தலைவரும் தி.மு.க தலைமை செயற்குழு உறுப்பினருமான கிள்ளைரவிந்திரன் வழங்கினார். இதில் தலைமை எழுத்தர் செல்வம், முன்னாள் கவுன்சிலர்கள் வள்ளியம்மை, செல்வி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் பேரூராட்சி செயல் அலுவலர் செல்வி நன்றி கூறினார்.