கடலூர் மாவட்டத்தில் மீன் வலத் துறை சார்பில் நடைபெறும் திட்டப்பணிகளை ஆட்சியர் கி. பாலசுப்பிரமணியன் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
புவனகிரி அருகேயுள்ள புதுக் குப்பம் மீனாவக் கிராமத்தில் ரூ.8 கோடி மதிப்பீட்டில் 205 மீ. நீளத்துக்குக் கால்வாய் ஆழப்படுத்துதல், வலை பின்னும் கூடம் அமைத்தல், அன்னங்கோவில், முடசலோடை அமைத்தல், மீன் ஏலக்கூடம் அமைத்தல், வலை உள்ளிட்ட பணிகளை ஆட்சியர் பார்வையிட்டார்.
இதேபோல, பரங்கிபேட்டை வெள்ளாறு முகத்து வாரத்தை ரூ.30 கோடி மதிப்பீட்டில் 605 மீட்டர் நீளத்துக்கு நேர் சுவர் அமைத்தல், 1,20,000 காண மீட்டர் அளவுக்கு ஆழப்படுத்துதல் போன்ற பணிகளையும் அவர் பார்வையிட்டார்.
ஆய்வின் பொது மீன் வளத்துறை துணை இயக்குனர் வேல் முருகன், கிள்ளை பேரூராட்சி மன்றத் துணைத் தலைவர் கிள்ளைரவிந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மீன் வளத் துறை திட்டப் பணிகள்: கடலூர் ஆட்சியர் ஆய்வு!