
பெயர்: எஸ்.கிள்ளைரவிந்திரன்
த/பெ: செல்லபெருமாள்
வயது: 16.03.1970 (49)
படிப்பு: BSC, MBA, BL,(PHD)
அரசினர் கலைக்கல்லூரி - சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் - சிதம்பரம், 11 சட்டக் கல்லூரி, சித்தூர்
உயர்நீதிமன்ற வழக்றிஞர் தொழில்
கட்சியில் சேர்ந்த ஆண்டு: 1986
வகித்த பொறுப்புகள்
1988 பரங்கிப்பேட்டை ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்
சிதம்பரம் அரசினர் கலைக் கல்லூரியில் 1991 -92 மாணவர் பேரவை தலைவர் மற்று திமுக மாணவரணி செயலாளர்
மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர்
மாவட்ட ஆதிதிராவிட நலக்குழு துணை அமைப்பாளர்
மாவட்ட பிரதிநிதி
கிள்ளை தொடக்க கூட்டுறவு வங்கி தேர்தலில் வெற்றி பெற்றார்
2006ல் கிள்ளை பேரூராட்சி மன்ற தலைவர் (5வது வார்டு உறுப்பினராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்)
தற்போது கிள்ளை பேரூர் கழக செயலாளர் மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினராக செயல்படுகிறார்.
பங்கேற்ற போராட்டங்கள்:
1 முதல் 5 வரை தான் படித்த கிள்ளை ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியை கண்காணிப்பு கேமரா, கணினி வசதியுடன் ஹை - டெக் பள்ளியாக மாற்றி அப்பள்ளி காமராஜர் விருது பெற காரணமாக இருந்தார்.
எழுத்து பணி:
சாதனை சிகரம் கலைஞர், உலக அரங்கில் சுற்றி சுழலும் சுழல் விளக்கு என்ற தலைப்புகளில் டாக்டர் கலைஞர் குறித்த நூல்களும், தமிழக மாணவர்களில் தளபதி என்ற தலைப்பில் இன்றைய கழக தலைவர் குறித்த நூலும், சொன்னது நீதானா? என்ற தலைப்பில் வைகோ பிரிந்த போது அவருக்கு கேள்விகளை முன்வைத்து ஒரு நூலும் எழுதி உள்ளார். தற்போது சீர்காழி தொகுதியில் கழக வளர்ச்சிக்கு உழைத்து மறைந்த சான்றோர்களில் விபரங்களை விடுவிடாக சென்று திரட்டி "காழி மண்ணின் கழக வேர்கள்” என்ற வரலாற்று புத்தகத்தை எழுதி வருகிறார். முரசொலியில் பல்வேறு கட்டுரைகள் எழுதி உள்ளார். கிள்ளை செய்தி மடல், புதிய உதய முரசு ஆகிட சஞ்சீகைகளை நடத்தி உள்ளார்.
விருதுகள்:
- தமிழக அரசின் சார்பில் துணை முதல்வர் தளபதி அவர்களை கையில் சிறந்த பேரூராட்சி தலைவருக்கான விருது.
- உஸ்மானியா பல்கலைக் கழகம், காந்தி கிராம பல்கலைக் கழகம், ராஜிவ் காந்தி பல்கலைக் கழகம் ஆகிய மூன்று பல்கலைக் கழகங்களும் சிறந்த பேரூராட்சி தலைவராக தேர்ந்தெடுத்து பாராட்டும், பயிற்சியும் அளித்தன.
- 2015 மழை வெள்ளத்தில் சிக்கிய கர்ப்பினி பெண்ணை காப்பாறியதால் “மழையை வென்ற மனிதர்கள்” என்ற விருதை விஜய் டி.வி கொடுத்தது.
- 1986 - 87 ஆண்டுகளில் நடந்த ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துக்கொண்டு 36 நாட்கள் கடலூர் சிறையில் இருந்தார். இதற்காக கழக தலைவர் கலைஞர் மற்றும் பேராசிரியர் கையொப்பம் இட்ட பாரட்டு சான்றிதழ் பெற்றார்.

- ஜெயின் கமிஷன் எதிர்ப்பு உள்ளிட்ட கட்சி நடத்திய அனைத்து போராட்டங்களிலும் கலந்துக்கொண்டு பல நாட்கள் சிறை மற்றும் 15 மேற்பட்ட வழக்குகளை சந்தித்துள்ளார்
- கழக தலைவர் தளபதி அவர்களை தரக்குரைவாக பேசிய முன்னால் அதிமுகவின் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அவர்களை எதிர்த்து முகநூலில் கருத்து தெரிவித்தால், அதிமுகவினர் கொடுத்த பொய் புகாரின் பேரில் கைது செய்யப்பட்டு பொறையார் சிறையில் 9 நாட்கள் அடைக்கபட்டார்.
- கடந்த 2016 தேர்தலில் சீர்காழி சட்டமன்ற தொகுதியில் கழக வேட்பாளராக களம் கண்டு 9003 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார். அதன் பிறகு கடந்த 5 ஆண்டுகளில் சீர்காழி தொகுதியில் ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு போராட்டம் உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்காக இளைஞர்களை திரட்டி போராடி உள்ளார்.
சமூக பணி:
சீர்காழியில் நிலம் அறக்கட்டளை பேரில் பல சமூக பணிகளை செய்து வருகிறார். குறிப்பாக காஜா புயல் பாதிப்பு மற்றும் அப்பகுதியில் தீ விபத்தில் பாதிகப்பட்ட மாணவர்கள் கல்விக்கு உதவினார் தொடர்ந்து உதவி வருகிறார். கொரோனா பதிப்பின் போது தொடர்ந்து தொகுதியில் உள்ள 25 ஆயிரம் குடும்பங்களுக்கு அரிசி. மளிகை, காய்கறி உள்ளிட்ட பொருட்களை வழங்கினார். ஊணமுற்றோர்கள் ஊள்ளிட்ட வ்இளிம்பு நிலை மக்களுக்கு தொடர்ந்து உதவி வருகிறார்.