இன்று கிள்ளை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் இருளர் பழங்குடியின மக்களுக்கான அடிப்படை வசதிகள் மற்றும் தேவையான சலுகைகள் வழங்குவது தொடர்பான கணக்கெடுப்பு முகாம் நடைபெற்றது. இதில் அடிப்படை வசதிகள், ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, சாதி சான்று, வாக்காளர் அடையாள அட்டை, தாட்கோ மூலம் கடனுதவி, மின் இணைப்பு, சூரிய ஒளி மின்சக்தி, குடிநீர் இணைப்பு, மருத்துவ காப்பீடு போன்ற தேவைகள் இந்த முகாமில் இசேவை மையம் மூலம் பதிவு செய்யப்பட்டது .. இந்த நிகழ்சியை நான் துவக்கி வைத்தேன், பேரூராட்சி மன்ற தலைவர் மல்லிகா முத்துக்குமார் முன்னிலை வகித்து மனுக்களை பெற்று வட்டாட்சியர் சந்திரசேகரன் அவர்களிடம் வழங்கினார்,, வருவாய் ஆய்வாளர் பாலசுப்ரமணியம், பேரூராட்சி எழுத்தர் செல்வம், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் அனைத்து சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர் !
கிள்ளை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் இருளர் பழங்குடியின மக்களுக்கான அடிப்படை வசதிகள் மற்றும் தேவையான சலுகைகள் வழங்குவது தொடர்பான கணக்கெடுப்பு முகாம்