கிள்ளை பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இதில் வெற்றி பெற்றவர்களை கொண்டு நேற்று பேரூராட்சி தலைவருக்கான தேர்தல் நடந்தது. காலையில் நடந்த தலைவர் தேர்தலில் திமுகவை சேர்ந்த 33 வது வார்டு கவுன்சிலர் மல்லிகா வேட்புமனு தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து யாரும் மனுத்தாக்கல் செய்யாததால் அவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டார். இதைத் தொடரந்து மதியம் நடந்த துணைத் தலைவருக்கான தேர்தல் கிள்ளை நகர திமுக செயலாளரும், தலைமை செயற்குழு உறுப்பினரும், பேரூராட்சி 6-வது வார்டு கவுன்சிலருமான கிள்ளைரவிந்திரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து அவர்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் செல்வி பதவிப் பிராணம் செய்து வைத்தார்.
கிள்ளை பேரூராட்சி தலைவர், துணை தலைவர் போட்டியின்றி தேர்வு!