சிதம்பரம் சி. முட்லூர் அரசுகலைக் கல்லுரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கடந்த 1987-ம் ஆண்டு முதல் 1990-ம் ஆண்டுவரை பி.எஸ்சி. தாவரவியல் படித்த முன்னாள் மாணவர் கிள்ளைரவிந்திரன் தலைமையில் கூடலூர், விழுப்புரம், நாகை, திருச்சி, தஞ்சை, பெரம்பலூர், விருதுநகர், கன்னியாக்குமரி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களை சேர்ந்த முன்னாள் மாணவர்கள் ஒன்று கூடினார்கள்.
பின்னர் அவர்கள் தங்கள் பழைய சம்பவங்களை நினைவு கூர்ந்து தங்களின் வழக்கை அனுபவங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொண்டனர். பின்னர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவை உண்டு மகிழ்ந்தனர்.
சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி!