கடந்த 10 ஆண்டுகளாக கிள்ளை பேரூராட்சியின் குடிநீர் தரமற்ற உவர்நீராகவே இருந்தது காரணம் வடக்குச்சாவடி அருகே இருந்த போரின் நீரின் தன்மை மாறிவிட்டது.
கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டமும் சரிவர செயல்படாமல் இருந்தது, கடந்த 44 நாட்களில் பேரூராட்சியில் மன்றம் திமுக தலைமையில் உருவான பிறகு கூட்டு குடிநீர் ஒரு நாளைக்கு தரவேண்டிய 7 லட்சம் லிட்டரில் 40 ஆயிரம் 50 ஆயிரம் இருந்த நிலை தற்போது 2 லட்சமாக உயர்ந்துள்ளது,5 லட்சம் வரை கிடைக்க மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு MRKP அவர்களது பரிந்துரையின் பேரில், இன்று நகர்புற உள்ளாட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் மாண்புமிகு KN நேரு அவர்களை சந்தித்து கோரிக்கை வைத்தோம் உடனடியாக அவர் குடிநீர் வடிகால் வாரிய பொறியியல் இயக்குனர் திருமதி வசந்தாள் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடனடியாக கிள்ளை பேரூராட்சியின் குடிநீர் பிரச்சனையை தீர்க்க உத்தரவிட்டார்கள்..அதன் தொடர்ச்சியாக முயற்சி மேற்கொண்டுள்ளோம்!
இன்று கிள்ளை பேரூராட்சிக்கு புதிதாக போர்வெல் போட குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.