உடன்பிறப்பே வா எனும் சந்திப்பு குறித்து கழக நிர்வாகிகளுக்கு மடல் எழுதியுள்ளார் மாண்புமிகு.திராவிட மாடல் முதலமைச்சர்

ஓரணியில் தமிழ்நாட்டை உருவாக்க *உடன்பிறப்பே வா* என்ற பாணியில் தமிழ்நாடு முழுவதும் உள்ள கழக நிர்வாகிகளை மாண்புமிகு.திராவிட மாடல் முதலமைச்சர், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சந்தித்து பேசினார். அந்த வகையில் கழக உடன்பிறப்புகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் மடல் எழுதியுள்ளார்.

‘உடன்பிறப்பே வா’ எனும் கழக நிர்வாகிகளின் மனம் திறந்த சந்திப்பின் அனுபவம் எப்படி இருந்தது என்பதை, கடலூர் மாவட்டம் கிள்ளை பேரூராட்சியைச் சேர்ந்த உடன்பிறப்பு *கிள்ளைரவிந்திரன்* அந்த அனுபவத்தை உணர்வுப்பூர்வமாகச் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்ததைப் படித்தேன்.

“உடன்பிறப்பே வா என்று அழைத்தார். சென்றேன். தாய், தந்தை இல்லாத எனக்குப் பெற்றோராய்த் தெரிந்தார். வாங்க கிள்ளை.. உட்காருங்க என்றார். 1986-இல் என் தொண்டை நரம்பு புடைக்கத் தளபதி வாழ்க.. தளபதி வாழ்க என்று கோஷம் போட்டேனே, அதே உணர்வுதான் வந்தது. தலைவரைப் பார்த்ததும் அதுபோல கத்தலாமே என்ற எண்ணம் வாய்வரை வந்துவிட்டது. என்னைப் பற்றியும், ஊர் பற்றியும், ஊரார் பற்றியும் அறிந்து தெரிந்து வைத்திருந்த ஆதாரத்தைக் கையில் வைத்துக் கொண்டு பேசினார். தலைவரின் இன்றைய அழைப்பு என்னை உற்சாகப்படுத்தியது. தலைவர் என் பெயரைக் கைப்பட எழுதி, வாழ்த்துகள் சொன்னார். இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்களில் இப்படி அடிமட்ட நிர்வாகிகளை நேரில் சந்தித்துக் கேட்டும், சொல்லியும், திருத்தியும், பாராட்டவும் செய்தவர்கள் யார்? கலைஞர் எனும் வீரிய வித்தில் பிறந்தது எதுவும் சொத்தை இல்லை. வித்தைத் தாங்கும் வேர்களும் பழுது இல்லை” என்று 

உடன்பிறப்புக்கேயுரிய உணர்ச்சியுடன் பதிவு செய்திருக்கிறார் *கிள்ளைரவிந்திரன்* இதுதான் கழகத் தலைமைக்கும் உடன்பிறப்புகளுக்குமான உறவு. பேரறிஞர் அண்ணா காலம் முதல் உங்களில் ஒருவனான என் தலைமை வரை இந்த உறவுதான் இந்த இயக்கத்தின் பலம். நமக்கிடையிலான உணர்வுமிக்க உறவையும் பாசத்தையும் சீரழிக்கலாமா என எதிரிகளும் ஏடுகளும் தலைகீழாய் நின்று தண்ணீர் குடித்தாலும் அது ஒருபோதும் நடக்காது என்பதைத்தான் 75 ஆண்டுகால இயக்கத்தின் வளர்ச்சி காட்டுகிறது.  என்று முதலமைச்சர் நன்றி மடல் எழுதியுள்ளார். இந்தச் செய்தியை அறிந்த திமுக தலைமை செயற்குழு உறுப்பினர், கிள்ளை பேரூர் கழக செயலாளர், பேரூராட்சி மன்றத் துணைத் தலைவர் *வழக்கறிஞர் கிள்ளைரவிந்திரன்* அவர்கள் உணர்ச்சி பொங்க, மனம் மகிழ்ந்து மாண்புமிகு. .

திராவிட மாடல் முதலமைச்சருக்கு சமூக வலைதளத்தில் நன்றி தெரிவித்துள்ளார்

*இதை விட எனக்கு எந்த மகுடமும் வேண்டாம், தலைவர் கலைஞர் என்னை பற்றி முரசொலியில் எழுதினார், இதோ திராவிட மாடல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்   அவர்கள் என்னை பற்றி அதிகாரபூர்வ திமுக பக்கத்தில் எழுதியுள்ளார்..*
*திமுக என்பது தலைமைக்கும் தொண்டனுக்குமான தொப்புள்கொடி உறவு!*
*நன்றி தலைவரே!
உயிர் உள்ளவரை திமுக என்பேன்*
*என்று மனம் மகிழ்ந்து நன்றி மடல் எழுதியுள்ளார் வழக்கறிஞர் கிள்ளைரவிந்திரன்.*
உடன்பிறப்பே வா எனும் சந்திப்பு குறித்து கழக நிர்வாகிகளுக்கு மடல் எழுதியுள்ளார் மாண்புமிகு.திராவிட மாடல் முதலமைச்சர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 12 =

Scroll to top
Social media & sharing icons powered by UltimatelySocial