கிள்ளையில் வாக்காளர் பட்டியல் சரிப்பார்ப்பு பணியை கண்காணிக்க வருகைபுரிந்த திரு.டி.என்.வெங்கடேஷ் IAS அவர்களை வழக்கறிஞர் கிள்ளைரவிந்திரன் வரவேற்றார்.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கிள்ளை பேரூரில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர், IAS திரு.டி.என்.வெங்கடேஷ் அவர்கள், கடலூர் மாவட்டத்தில் நடைபெறும் சுருக்கமுறை திருத்தப்பணிகள் மற்றும் தேர்தல் விழிப்புணர்வு நடவடிக்கைகளை ஆய்வு செய்திடவும், கண்காணித்திடும் பொருட்டு வாக்காளர் பட்டியல் பார்வையாளராக வருகை புரிந்தார்.
இந்த நிலையில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும், கிள்ளை பேரூராட்சி மன்றத் துணைத்தலைவர், பேரூர் கழக செயலாளர், வழக்கறிஞர் கிள்ளைரவிந்திரன் அவர்கள் தலைமையில் ஏராளமான புதிய வாக்காளர்கள் சேர்க்கும் பணி நடைபெற்றது. முக்கியமாக இளம் வாக்காளர்கள், மற்றும் அதில் ஏராளமான பெண் வாக்காளர்களும் கலந்து கொண்டு தங்களை வாக்காளர் பட்டியலில் இணைத்துக் கொண்டனர். எனவே, இந்நிகழ்வில் பேரூராட்சி மன்றத் தலைவர் மல்லிகா முத்துக்குமார் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.