74 வது குடியரசு தினவிழா
74 வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு கிள்ளை அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 900 மாணவர்கலும் கிள்ளை அரசு நூலகத்தில் ஆயுட்கால உறுப்பினராக சேர்க்கப்பட்டனர் !
=============================
கிள்ளை அரசு மேல்நிலைப்பள்ளியில் 74 வது குடியரசு தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது, இந்த நிகழ்ச்சியில் பள்ளியில் படிக்கும் 300 மாணவர்களுக்கு நூலக ஆயுட்கால கட்டணத்தை R S டிரஸ்ட் சார்பிலும் 600 மாணவர்களுக்கு கிள்ளைரவிந்திரன் சார்பிலும் கட்டணம் செலுத்தப்பட்டு கிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 900 மாணவர்களும் கிள்ளை கிளை நூலகத்தில் உறுப்பினராக சேர்க்கப்பட்டு அனைவருக்கும் நூலக உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது,..
இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் திருமதி பவானி தலைமை தாங்கினார், பேரூராட்சி மன்ற தலைவர் மல்லிகா முன்னிலை வகித்தார்.
அவருக்கும் உறுப்பினர் அட்டையை வழங்கி கிள்ளைரவிந்திரன் சிறப்புரையாற்றினார்,
மாவட்ட நூலகர் சங்கர், கிளை நூலகர்கள் பால் ஜோன், இரா.அருள், கணேஷ், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் பாண்டியன், யாஸ்மின், மைதிலி, குமார், நிறைமதி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் மதுரச்செல்வி, உட்பட ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர் !
74 வது குடியரசு தினவிழா