*முதல்வருக்கு எதிராக பாமக வினர் போராட்டம். அதிரடி வேட்டையில் ஏடிஜிபி டேவிட்சன் IPS.*
தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள், அதானி குழுமத் தலைவர்- கௌதம் அதானியை ரகசியமாக சந்தித்துள்ளார். என்றும், இதற்கு தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுருந்தார்.
இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. எனவே, “அவருக்கு வேறு வேலை இல்லை தினமும் ஒரு அறிக்கை கொடுப்பார்.அதுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை” என்றார்.
அதனைத்தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் ராமதாஸ் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி கோபத்துடன் கூறினார்.

இதனால், வடமாவட்டங்களில் சில பகுதிகளில் பாமகவினர் போராட்டத்தில் குதித்துள்ளனர்.பாமகவின் போராட்டத்தை முறியடிக்க தமிழக உளவுத்துறை ஐஜி செந்தில்வேலன், டிஜிபி சங்கர் ஜிவால், கூடுதல் டிஜிபி டேவிட்சன் IPS ஆகியோர் மாநகர ஆணையர்கள், மாவட்ட எஸ்பிக்கள், சரக டிஐஜி, மண்டல ஐஜி ஆகியோருடன் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை தொடர்பான ஆலோசனைகளில் இறங்கியுள்ளனர்.
இந்தநிலையில் இரவோடு இரவாக, ஏடிஜிபி டேவிட்சன் IPS முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதில், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் நோக்கில் பாமகவினர், மாநிலம் முழுவதும் போராட்டம் மற்றும் சாலைமறியலில் ஈடுப்படப்போவதாக தகவல் கிடைத்துள்ளது.

இதனால், காவல் நிலையங்களில் உள்ள அனைத்து அதிகாரிகளும் தங்கள் முழு பலத்தையும் திரட்டி, ரோந்துப் பணிகளில் ஈடுபட அறிவுறுத்தப்படுகிறார்கள்.
எந்தவிதமான அசம்பாவித சம்பவங்களும், நடைபெறாமல் இருக்க பாதிக்கப்படக்கூடியப் பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் போலீஸ் பாதுகாப்பு போட வேண்டும்.
ரோந்துப் படையினர் எப்போதும், விழிப்புடனும் கையில் லத்தி, ஹெல்மெட், போலீஸ் ஷீல்டு, கண்ணீர்புகைக்குண்டு ஆகியவற்றை தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும்.
வடக்கு, மேற்கு மற்றும் மத்திய மண்டல ஐஜிக்கள் மற்றும் சேலம் கமிஷனர் ஆக்யோர் விழிப்புடன் கண்காணிக்க வேண்டும்.

இரவு நேரப் பேருந்து சேவைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் கூடுதல் விழாப்புடன் இருக்க வேண்டும்.போலீஸ் பாதுகாப்புடன் அதிகாலை பேருந்து சேவைகள் இயக்கப்பட வேண்டும்” என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும், “பாமக நடத்தும்போராட்டங்களுக்கு அனுமதி கொடுக்கக்கூடாது. போராட்டம் நடத்துவதற்கு முன் போராட்டக்காரர்களை கைது செய்ய வேண்டும்” என்று ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவிட்டுள்ளார்.

இதனைத்தொடர்ந்து, கடலூர், சேலம், கரூர், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பாமகவினர் போராட்டம் நடத்த முற்பட்ட போதே, அவர்களை உடனடியாக போலீசார் கைது செய்தனர்.
சேலத்தில் பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட150-க்கும் மேற்பட்ட பாமகவினரை போலீசார் கைது செய்தனர். தமிழகம் முழுவதும் வெடித்துள்ள பாமகவினரின் போராட்டத்தை தடுக்க ஏடிஜிபி டேவிட்சன் IPS தீவிர ஆக்ஷனில் இறங்கியுள்ளனர்.
முதல்வருக்கு எதிராக பாமக வினர் போராட்டம். அதிரடி வேட்டையில் ஏடிஜிபி டேவிட்சன் IPS.