சமத்துவ சமுதாயத்தை உருவாக்கும் பயணமே *திராவிட மாடல்* அரசின் ஆட்சி.
நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் ஒன்றியத்திற்குட்பட்ட ‘ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி *அரிசன காலனி* எனும் பெயர் சாதியக்குறியீட்டால் பொறிக்கப்பட்டிருந்ததை, ‘ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி மல்லசமுத்திரம் கிழக்கு ‘ எனப் பெயர் மாற்றம் செய்வதற்கான அரசாணையை மாண்புமிகு. தமிழ்நாடு முதலமைச்சர் *மு.க.ஸ்டாலின்* அவர்களின் ஆணைக்கிணங்க,
மாண்புமிகு . பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் *அன்பில் மகேஷ் பொய்யாமொழி* அவர்கள், மல்லசமுத்திரம் கிராமத்திற்கு நேரடியாக சென்று *அரிசனகாலனி* எனும் பெயரினை அழித்து, அரசாணையை பள்ளியின் தலைமையாசிரியரிடம் வழங்கினார். இச்செய்தியை அறிந்த தமிழ்நாட்டு மக்கள் சமத்துவ சமுதாயத்தை உருவாக்கும் சிந்தனையில் பயணிக்கும் *திராவிட மாடல்* அரசை பெரிதும் பாராட்டி மகிழ்கின்றனர்.