கிள்ளை பேரூராட்சி அலுவலகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம் வழக்கறிஞர் கிள்ளைரவிந்திரன் தலைமையில் நடைபெற்றது, செயல் அலுவலர் மருதுபாண்டியன் வரவேற்று பேசினார்.. குழந்தைகள் பாதுகாப்பு கமிட்டி உறுப்பினர்களான மேல்நிலைப் பள்ளி ஆசிரியயை ஜான்சி, பேரூராட்சி மன்ற உறுப்பினர் மதுரச்செல்வி, கிராம தன்னார்வலர் வங்கக்கடல் மலையரசன் , பெற்றோர்கள் கவியரசி, விமல்குமாரி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்..
நிகழ்சியில் சிறப்பு அழைப்பாளராக கடலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழு ஒருங்கிணைப்பாளர் யாமினி கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்..
இன்றைய தலைமுறை போதை பொருள் பயன்படுத்துவதை தடுப்பதையும், ஆண்ட்ராய்டு செல்போன் பயன்படுத்துவதை தடுப்பதையும், பெண் குழந்தை களுக்கு நல்ல தொடுதல் கெட்ட தொடுதல் பற்றிய புரிதலை ஏற்படுத்த பெற்றோர்களே முயற்றி செய்ய வேண்டும், அனைத்து பள்ளிகளிலும் விழிப்புனர்வு பிரச்சாரங்கள் நடத்த வேண்டும் என்று கிள்ளை பேரூராட்சி மன்ற துணைதலைவர் கிள்ளை ரவிந்திரன் கருத்துரை ஆற்றினார், பேரூராட்சி எழுத்தர் செல்வம் நன்றி கூறினார்!