கிள்ளை பேரூராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்.
கடலூர் மாவட்டம், கிள்ளை பேரூராட்சி மற்றும் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இணைந்து நடத்தும் தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமினை பேரூராட்சி மன்றத் துணைத் தலைவர் வழக்கறிஞர் கிள்ளைரவிந்திரன் அவர்கள் தலைமையில், பேரூராட்சி செயல் அலுவலர் பாஸ்கரன் அவர்கள் முன்னிலையில்
டாக்டர். புவனேஸ்வரி மற்றும் மக்களைத்தேடி மருத்துவம் செவிலியர் சுபஶ்ரீ, ஹேமாவதி ஆகியோர் தலைமையிலான மருத்துவ குழுவினர் சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், இசிஜி, கண் மருத்துவம் போன்ற பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளித்து உரிய முறையில் மருந்துகள் வழங்கப்பட்டது.
கிள்ளை பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்.வழக்கறிஞர் கிள்ளைரவிந்திரன் தலைமைதாங்கினார்.