கிள்ளை பேரூராட்சியின் சார்பில் ” மக்களுடன் முதல்வர் ” திட்டம்

திராவிட மாடல் முதலமைச்சர் மாண்புமிகு M. K. Stalin அவர்களின் ஆணையின்படி மாண்புமிகு Udhayanidhi Stalin அவர்களின் மேற்பார்வையில் மாண்புமிகு MRK.Panneerselvam அவர்களின் ஆலோசனையின்படி, கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமிகு டாக்டர் அருண் தம்புராஜ் IAS அவர்களின் வழிகாட்டுதலோடு கிள்ளை RS திருமண மண்டபத்தில் நடைபெற்றது …

இந்த நிகழ்ச்சியில் 13 துறைகளின் சார்பில் அமைக்கப்பட்ட கவுண்டர்களில் அந்தந்த துறையின் அலுவலர்கள் கலந்துகொண்டனர்…

நிகழ்ச்சி காலை சரியாக 10.00 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கப்பட்டது..

முதலாவதாக கோரிக்கையோடு வரும் பயனாளிகளின் குறையை கேட்டு மனுவாக தாயார் செய்து டோக்கன் வழங்கப்பட்டது, பிறகு மனுவை பெற்று பதிவு செய்யப்பட்டு அமர வைத்து, சித்த மருத்துவத்துறை மூலம் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டு பிறகு சுகாதாரத்துறை மூலம் BP, Sugar Test பார்க்கப்பட்டது..

பிறகு டோக்கனில் உள்ள எண் வரிசை படி அவர்களது மனுவுடன் தன்னார்வலர்கள் உதவியுடன் சம்மந்தப்பட்ட துறை கவுண்டரில் உள்ள அதிகாரிகளிடத்தில் ஒப்படைத்து ஒப்புகை சீட்டும் வழங்கப்பட்டது..

இந்த நிகழ்ச்சியில் பொக்களிடமிருந்து 433 மனுக்கள் பெறப்பட்டு அதில் 69 மனுக்கள் இதே முகாமில் தீர்வு காணப்பட்டு உரியவர்களுக்கு உத்தரவு நகல் வழங்கப்பட்டது ..

இறுதியாக 5.00 மணிக்கு நாட்டுப்பண்ணுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுபெற்றது!

இந்த நிகழ்ச்சிக்கு உறுதுணையாக இருந்த பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், பேரூராட்சி பணியாளர்கள், அனைத்து துறை அரசு அலுவலர்கள் அனைவருக்கும் நன்றியுடைய வணக்கங்கள்!

கிள்ளை பேரூராட்சியின் சார்பில் ” மக்களுடன் முதல்வர் ” திட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + 6 =

Scroll to top
Social media & sharing icons powered by UltimatelySocial