கிள்ளையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை மாவட்ட ஆட்சித்தலைவர் கிள்ளை பேரூராட்சியில் ஆய்வு மேற்கொண்டார்…!
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து கடலூர் மாவட்டம், கிள்ளை பேரூராட்சியில் இயற்கை பேரிடரில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் விதமாக பேரூராட்சி நிர்வாகம் தயார்நிலையில் இருந்தது…
அதிகம் இயற்கை பேரிடர்களால் பாதிக்கும் கிள்ளை பேரூராட்சி கடற்கரை மீனவர் கிராமங்களில் கடலூர் மாவட்ட ஆட்சியர் திருமிகு சிபி ஆதித்யா செந்தில்குமார் IAS அவர்கள் ஆய்வுசெய்து புயல் பாதுகாப்பு மையங்களை பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கினார்..
அப்போது அவரிடம் பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் வழக்கறிஞர் கிள்ளைரவிந்திரன் MGR திட்டு தடுப்பு சுவர் விரிவுபடுத்துவது, ஊர் முழுவதும் சிமெண்ட் சாலை புதுப்பித்து அமைப்பது கழிவு நீரை நீர் உறுஞ்சும் இன்ஞ்சின் மூலம் வெளியேற்றுவது உள்ளிட்ட கோரிக்கைகளையும், முழுக்குத்துறை கிராமத்திற்கு சுடுகாடு கட்டவும், பேரூராட்சி மூலம் படகு வாங்கவும் வனத்துறை அனுமதி அளிப்பது, உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தார் உடன் சிதம்பரம் வருவாய் வட்டாட்சியர் மற்றும் கிள்ளை பேரூராட்சி செயல் அலுவலர் மருதுபாண்டியன், எழுத்தர் செல்வராஜ் ஆகியோர் உடன் இருந்தனர் !