கடலூர் மாவட்டம், சிதம்பரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கிள்ளை பேரூரில் பாகம் எண் – 112, எம்.ஜி.ஆர்.நகர், தளபதி நகர், சிசில் நகர், இருளர் பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதியில் யாரும் மீன்பிடி தொழிலுக்கு செல்லாமல், பொது இடத்தில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர், பேரூர் கழக செயலாளர், பேரூராட்சி
மன்றத் துணைத் தலைவர் வழக்கறிஞர் கிள்ளைரவிந்திரன் அவர்கள் அனைவரையும் ஒன்றுதிரட்டி திராவிட மாடல் அரசின் நான்காண்டு சாதனைகளை எடுத்துரைத்தும், மக்களிடையே திராவிட மாடல் ஆட்சியின் திட்டங்களில் நீங்கள் பயன்பட்டுள்ளீர்களா எனவும் உங்களுக்கு இன்னும் தேவைகள் இருக்கிறதா என்றும் மக்களிடையே கேட்டறிந்தார்.

இந்தநிலையில், இருளர் பழங்குடி மக்கள் எங்கள் தேவைகள் அனுத்தையும் ஒவ்வொன்றாக திராவிட மாடல் அரசின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நிறைவேற்றி வருகிறார்கள். எங்களின் குறைகளை அவர்களே சரிசெய்து தருவார்கள் என்ற நம்பிக்கையும் எங்களுக்கு உள்ளது என்று உள்ளம் மகிழ்ந்து தெரிவித்தனர்.

ஆகையால், நாங்கள் அனைவரும் ஓரணியில் தமிழ்நாட்டை வலுசேர்க்க எங்களை இணைத்துக்கொள்கிறோம். என்றும் மன மகிழ்ச்சியுடன் கூறினார். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட திமுக வால், சிதம்பரம் தொகுதியின் பார்வையாளராக நியமிக்கப்பட்ட மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் ஓய்வு பெற்ற ஆசிரியர் திரு. D.P. அவர்கள் கலந்து கொண்டார்!

