மயிலாடுதுறை மாவட்ட உருவாக்கத்தில்,சீர்காழியை பிரித்து,வருவாய் கோட்டம் அமைத்திடவும், சீர்காழி அரசு மருத்துவமனையை தலைமை மருத்துவமனையாக உருவாக்கிட கோரியும்,மிகவும் பின்தங்கிய பகுதியாக இருக்கின்ற கொள்ளிடம் சுற்றியுள்ள கிராமங்களை ஒன்றிணைத்து, கொள்ளிடம் தாலுக்கா உருவாக்கிடவும், அதன் தேவையையும், அவசியத்தையும் விளக்கி,
இன்று மயிலாடுதுறை மாவட்ட உருவாக்க தனி அதிகாரி திருமிகு ஆர்.லலிதா IAS அவர்களிடம்,நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்..
முழுமையாக கேட்டுக்கொண்ட தனி அதிகாரி அவர்கள், தான் ஆய்வு செய்தவரை, சீர்காழியையும், கொள்ளிடத்தையும் பிரித்து தனி தாலுகா உருவாவது அவசியம் என்பதை ஒத்துக்கொண்டார்…
வரும் 30 அன்று பொதுமக்கள் கருத்து கேட்பதற்காக வருகை தரக்கூடிய CRA ( தலைமை வருவாய் அதிகாரி)அவர்களிடம் கருத்துக்களை முன்வைக்க கூறியதோடு என்னுடைய மனுவையும் அவசியம் அரசுக்கு பரிந்துரைப்பதாக கூறினார்…
தனிஅதிகாரி அவர்களுக்கு வாழ்த்துக்களும்,நன்றியும்…